ரூ. 33,000 கோடி சொத்து.., இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளர்: யார் தெரியுமா?
இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளர் யார் என்பது குறித்து பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
அதுவும் அவர் தமிழ் சினிமாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கிறது.
உச்ச நடிகர் ஷாருக்கான், அமிதாப் பச்சனை விட இவர் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்.
அவர் தான் கலாநிதி மாறன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சன் குழுமத்தின் தலைவராக உள்ள கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு ரூ.33,400 கோடி என ஹூருன் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான டாப் பணக்காரர்களுக்கான பட்டியலில் இதனை ஹூருன் இந்தியா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
30க்கும் அதிகமான டிவி சேனல்கள் சன் குழுமத்தில் இயங்கி வருகின்றன.
இது தவிர்த்து, செய்தித்தாள்கள், இதழ்கள், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம், சன் டைரக்ட் சேட்டிலைட் என பல தளங்கள் இயங்கி வருகின்றன.
கடந்த 14 ஆண்டுகளில் எந்திரன், பேட்ட, ஜெயிலர், பீஸ்ட், சர்கார், திருச்சிற்றம்பலம், ராயன் அடுத்து ஜெயிலர் 2 என பல படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளராக வலம் வருகிறார் கலாநிதி மாறன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |