கோடிகளில் வருமானம்.., உலகில் அதிக சம்பளம் வாங்கும் யூடியூபர்: யார் தெரியுமா?

Yashini
in பொழுதுபோக்குReport this article
ஆயிரக்கணக்கான யூடியூபர்கள் தங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க ஊக்குவித்து பொழுதுபோக்கு வீடியோக்களை உருவாக்குகிறார்கள்.
இன்றும் கூட, குழந்தைகள் இந்தத் துறையில் இறங்கி, தங்கள் வயதுடைய பார்வையாளர்களுக்காக ஈர்க்கக்கூடிய வீடியோக்களை உருவாக்குகிறார்கள்.
அந்தவகையில், உலகில் அதிக சம்பளம் வாங்கும் யூடியூபர் யார் என்று பார்க்கலாம். மிஸ்டர் பீஸ்ட் என்று மக்களால் அறியப்படும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவர், அமெரிக்காவின் கேன்சஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
மே 7, 1998 இல் பிறந்த அவர், ஆடம்பரமான சவால்கள் மற்றும் பாரிய பரிசுகளைக் கொண்ட அவரது உயர் ஆற்றல் வீடியோக்களுக்கு பிரபலமானவர்.
இவர் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து யூடியூபராக திகழ்ந்து வருகிறார். ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்துதான் மிகப்பெரிய முன்னேற்றத்தையடைய ஆரம்பித்தார்.
தனது வாழ்வில் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டாலும், தாராள மனமுடைய இவர், பல நன்மைகளையும் செய்துள்ளார்.
மருத்துவமனைகளுக்கு நன்கொடை, மரங்கள் நடுவதற்கு நன்கொடை அளிப்பது, கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து வைத்துள்ளார்.
மேலும், தனது வீடியோக்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு இலவச கார், மற்றும் பெருமளவில் பணம் பரிசளிப்பது என பல நல்ல காரியங்கள் செய்துள்ளார்.
யூடியூப் விளம்பரங்கள், தனியார் விளம்பரங்கள், தனது சொந்த மெர்ச்சண்டைஸ் மூலம் மாதம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருமானம் ஈட்டுவதாக அறியப்படுகிறது.
இவரது சேனலில் விளம்பரம் செய்ய ஒரு வீடியோவிற்கு சுமார் 1 மில்லியன் டாலர் வரை கொடுக்க வேண்டும்.
சராசரியாக 24.97 நிமிட வீடியோ நீளத்துடன், அவர் தற்போது மாதந்தோறும் $4.6M - $13.8M சம்பாதிக்கிறார்.
ஆண்டு வருவாய் தோராயமாக $50 மில்லியன் என சொல்லப்படுகிறது. மேலும், இவரின் நிகர மதிப்பு சுமார் $500 மில்லியன் என கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் தனது வருவாயின் பெரும்பகுதியை தனது வீடியோக்களில் முதலீடு செய்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.
380M பின்தொடர்பவர்கள் மற்றும் 850 வீடியோக்களுக்கு மேல் பதிவிட்ட மிஸ்டர் பீஸ்ட் அதிக சம்பளம் வாங்கும் யூடியூபராக தரவரிசையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |