யார் இந்த ஸ்டீபன் ஹாக்கிங் ? சில சுவாரஸ்ய பொது தகவல்கள் இதோ!
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018)ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார்
2018-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தனது 76-வது வயதில் இறந்தார்.
இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.
இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.
காலவெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார்.
தளராத தனது உழைப்பினால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு வந்த மிகவும் திறமையான, புகழ்மிக்க விஞ்ஞானியாக ஆனார் ஹாக்கிங். கருந்துளை பற்றிய இவரது ஆராய்ச்சி முடிவுகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஹாங்கிங் ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார்.
2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்சு இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்தன.
21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் எனவும் அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டார்.
விருதுகள்
- ஆடம்சு பர்சு (1966)
- எடிங்டன் பதக்கம் (1975)
- மாக்சுவெல் பதக்கமும் பரிசும் (1976)
- ஐன்மேன் பரிசு (1976)
- இயூசு பதக்கம் (1976)
- ஆல்பர்ட் ஐன்சுடைன் விருது (1978)
- அரச வானியல் கழகப் தங்கப் பதக்கம் (1985)
- திராக் பதக்கம் (1987)
- ஊல்ஃப் பர்சு (1988)
- கோலி பதக்கம் (2006) அடிப்ப
- டை இயற்பியல் பரிசு (2012)