மன்னர் சார்லசை கழிவறைக்குள் வைத்து பூட்டிய இளம்பெண்
தொலைக்காட்சி பிரபலமான ஒரு இளம்பெண், தன் பணியின் ஆரம்ப நாட்களில், மன்னர் சார்லசை கழிவறைக்குள் வைத்து பூட்டிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
துர்நாற்றம் வீசிய நதி
அப்போது இளவரசராக இருந்த சார்லஸ், வேல்ஸ் நாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ளார்.
நிகழ்ச்சி நடக்கவிருந்த கட்டிடத்தின் அருகே ஒரு நதி உள்ளது. அந்த நதியின் நீர் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்திருக்கிறது.
அந்த நாற்றம், அந்தக் கட்டிடத்தில் உள்ள ஆண்கள் கழிவறையின் ஜன்னல் வழியாக கட்டிடத்திற்குள் வருவதை அந்த இளம் நிகழ்ச்சி தொகுப்பாளரான இளம்பெண் அறிந்திருக்கிறார். அவரது பெயர் Alex Jones.
image - PA MEDIA
மாயமான இளவரசர் சார்லஸ்
இளவரசர் சார்லஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது, கட்டிடத்திற்குள் துர்நாற்றம் வீசக்கூடாது என முடிவு செய்த Alex Jones, கழிவறையைப் பூட்டிவிட்டால் நாற்றமே வராதே என யோசித்திருக்கிறார்.
ஆக, மெதுவாகச் சென்று ஆண்கள் கழிவறையைப் பூட்டிவிட்டு வந்துவிட்டார் Alex Jones.
சரி, நிகழ்ச்சி துவங்கப்போகிறது. ஆனால், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த இளவரசர் சார்லசைக் காணவில்லை.
இளவரசர் எங்கோ மறைந்துபோக, அந்த இடமே பரபரப்பாகியுள்ளது. ஆளாளுக்கு இளவரசரைத் தேடுகிறார்கள். அப்போது Alex Jonesக்கு கழிவறைக்குள்ளிருந்து யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. கதவைத் திறந்தால், உள்ளே இளவரசர் சார்லஸ் நின்றுகொண்டிருந்திருக்கிறார்.
Alex Jones அதிர்ந்துபோய் நிற்க, நல்ல வேளையாக இளவரசர் சார்லஸ் கோபப்படவில்லையாம். அந்த சம்பவத்தை அவர் வேடிக்கையாக எடுத்துக்கொண்டதாக கூறுகிறார் Alex Jones.
image - GETTY IMAGES