என் மகனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை... மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரின் தந்தை
மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் என கருதப்படும் இளைஞரின் தந்தை, தன் மகனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, ஏதோ பயங்கர தவறு நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று, காலை விண்ட்சர் மாளிகையின் அருகில் மர்ம நபர் ஒருவர் நடமாடுவதை CCTVகமெரா மூலம் கவனித்த பாதுகாவலர்கள் விரைந்து சென்று அந்த நபரைக் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தின் அருகில் அம்பெய்யும் கருவி (crossbow) ஒன்றும் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், அதாவது அந்த மர்ம நபர் விண் ட்சர் மாளிகையில் கைது செய்யப்படுவதற்கு 24 நிமிடங்களுக்கு முன்பு, காலை 8.06 மணிக்கு ஸ்னாப்சாட்டில் மகாராணியாருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும், வீடியோவில் காணப்படும் நபரும் ஒருவர்தான் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அதை இன்னமும் பொலிசார் உறுதி செய்யவில்லை.
ஆனால், வீடியோவில் காணப்படும் அந்த நபர், தான் பிரித்தானிய மகாராணியாரான எலிசபெத் மகாராணியாரைக் கொலை செய்ய முயற்சி செய்யப்போவதாகவும், 1919ஆம் ஆண்டு, ஜாலியன்வாலாபாகில் கொல்லப்பட்டவர்களுக்காக பழிக்குப் பழி வாங்குவதற்காக தான் அதைச் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தங்கள் இனத்துக்காக கொலைசெய்யப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், பாகுபாடு காட்டப்பட்டவர்கள் ஆகியோருக்காக பழி வாங்குவதற்காகவும் இதைச் செய்கிறேன் என்று கூறியுள்ள அந்த நபர், நான் ஒரு இந்திய சீக்கியர். என் பெயர் Jaswant Singh Chail, அதை நான் Darth Jones என்று மாற்றிக்கொண்டேன்’ என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, Southamptonஇல் வாழும் Jaswantஇன் தந்தையான Jasbir Singh Chail (57), தன் மகனுக்கு ஏதோ பெரிய பிரச்சினை என்றும், அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
என் மகனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால், அவனுக்கு உதவ முயன்று வருகிறோம் என்று கூறியுள்ள Jaswantஇன் தந்தையான Jasbir Singh, இந்த பிரச்சினையை சரி செய்ய முயன்றுகொண்டிருக்கிறோம், ஆனால், அது எளிதல்ல என்று கூறியுள்ளார்.
Jaswant, Southamptonஇலுள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசதியாக வளர்க்கப்பட்ட இளைஞர். அவரது தந்தையான Jasbir Singh, தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.