பிரான்சில் காலையில் பல்பொருள் அங்காடியைத் திறந்த ஊழியர்கள்: சினிமாவில் வருவது போல் ஒரு சுவாரஸ்ய சம்பவம்...
ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில் வருவதைப்போல, கடை ஒன்றிற்குள் பதுங்கிய ஒருவர், ஊழியர்கள் அனைவரும் வீடு சென்றதும், நொறுக்குத்தீனிகள், இறால், சாசேஜ் முதலான உணவுப்பொருட்களை நன்றாக சாப்பிட்டுவிட்டு, மதுபானமும் குடித்திருக்கிறார்.
போதையில் அவர் நன்றாக தூங்கிவிட, காலையில் பொலிசார் வந்து அவரைப் பிடித்துக்கொண்டார்கள்.
பிரான்சில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பல்பொருள் அங்காடி ஒன்றைத் திறந்த ஊழியர்கள், ஆங்காங்கே பொருட்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு குழப்பமடைந்துள்ளார்கள்.
அங்காடியின் ஒவ்வொரு பகுதியாக ஆராய, துணிகள் பகுதியில், துணிகள் மீது ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
உடனடியாக அவர்கள் பொலிசாரை அழைக்க, பொலிசார் வந்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
விசாரணையில், பிரபல ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில் வருவதைப்போல, பகல் வேளையில் கடைக்குள் பதுங்கிய அந்த நபர், ஊழியர்கள் அனைவரும் வீடு சென்றதும், அங்கிருந்த நொறுக்குத்தீனிகள், இறால், சாசேஜ் முதலான உணவுப்பொருட்களை நன்றாக சாப்பிட்டுவிட்டு, மதுபானமும் குடித்திருக்கிறார்.
ஒரு ஆறு கணினி பார்சல்களைத் திறந்த அவர், பிறகு அவற்றையும் திருடிச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், போதை காரணமாகவோ என்னவோ, நன்றாகத் தூங்கிவிட, காலையில் கடை ஊழியர்களிடம் சிக்கிக்கொண்டார்.
அந்த 47 வயது நபர் நாசம் செய்த பொருட்களின் மதிப்பு 3,000 யூரோக்கள் ஆகும்.
இந்த சம்பவம், பிரான்சிலுள்ள Pyrénées-Atlantiques என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
பாரீஸ் புறநகர்ப்பகுதியைச் சேர்ந்த அந்த நபர் இதற்கு முன் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டவர் இல்லை என்பதால், அவருக்கு 100 யூரோக்கள் அபராதமும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் புறநகர்ப்பகுதியைச் சேர்ந்த அந்த நபர் இதற்கு முன் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டவர் இல்லை என்பதால், அவருக்கு 100 யூரோக்கள் அபராதமும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.