5000 கோடி செலவில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமணத்தை முன் நின்று நடத்தியவர் யார் தெரியுமா?
உலக பணக்காரர்களில் 11வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, தனது இளைய மகனின் திருமணத்தை ரூ. 5000 கோடி செலவில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி இல்ல திருமணம்
Photo: Stories by Joseph Radhik
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார்.
Photo: Stories by Joseph Radhik
இவர்களுடைய திருமணம் தான் தற்போது அனைவரது பேச்சாகவும் இருக்கிறது. அம்பானி இல்ல திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்? கோடிக் கணக்கில் செலவழித்து இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளார்கள்.
மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குறித்த திருமணமானது பிரமாண்டமாக நடைபெற்றது.
Photo: Stories by Joseph Radhik
இந்த திருமணம் பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும் வகையில் நடைபெற்றது.
திருமணத்திற்கு முந்தைய விழாக்கள், பயண விழாக்கள் மற்றும் பூஜைகள் உட்பட, கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நான்கு மாதங்களுக்கு மேல் நீடித்தது.
Photo: Stories by Joseph Radhik
இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்த, நுணுக்கமான திட்டமிடல் தேவை. இதை அம்பானி குடும்பத்தினர் தான் செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது இல்லை.
இவை அனைத்திற்கும் பின்னால் ஓர் நபர் இருக்கிறார். அவர் யார் என்று குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Photo: Stories by Joseph Radhik
யார் அந்த நபர்?
அம்பானி திருமணத்தில், ஜாம்நகரின் முதல் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மற்றும் தெற்கு ஐரோப்பாவில் ஆடம்பரமான கப்பல் கொண்டாட்டம் முதல் மும்பையின் ஒரு வார கால ஆடல் பாடல் வரை அனைத்தும் திருமண திட்டமிடுபவர்களால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
Photo: Stories by Joseph Radhik
மூன்று நிறுவனங்கள் இவற்றை திட்டமிட்டு செய்தனர். ஒரு நிறுவனம் மேடையைக் கையாள்வது, ஒன்று விருந்தினர்கள் மற்றும் ஒன்று தரையில் அலங்காரம் செய்வதை முன்னெடுத்தனர். இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை.
இவை அனைத்தையும் ஒன்றாக செய்வதற்கு அம்பானி குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட ஒரு முக்கிய குழுவே இதை கையாண்டது.
Photo: Stories by Joseph Radhik
குறித்த குழுவில் குடும்ப உறுப்பினர்கள் ஷ்லோகா மேத்தா மற்றும் இஷா அம்பானி மற்றும் சில குடும்ப உறுப்பினர்களும் ஈடுபட்டிருந்தனர்.
Photo: Stories by Joseph Radhik
அதன் தலைவராக, குடும்பத் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, அனைத்து திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo: Stories by Joseph Radhik
Photo: Stories by Joseph Radhik
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |