MI vs DC போட்டி மழையால் ரத்தானால் எந்த அணி பிளே ஆஃப் செல்லும்?
இன்றைய MI vs DC போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
MI vs DC
2025 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 வது அணிக்கான போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் உள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் மும்பை மற்றும் டெல்லிக்கு இடையேயான போட்டி, பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதி போட்டியாக மாறியுள்ளது.
தற்போது மும்பை அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.
மும்பை பிளே ஆஃப் வாய்ப்பு
இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால், 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும். இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால், 15 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறும்.
ஆனால் மும்பை அணி பஞ்சாப்பிற்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்று, டெல்லி அணி பஞ்சாபிற்கு எதிரான தனது கடைசி போட்டியில் தோல்வியடைய வேண்டும்.
அப்படி நடந்தால், மும்பை அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி 15 புள்ளிகளுடனும் இருக்கும். இதனால் மும்பை பிளே ஆஃப் வாய்ப்பை பெரும்.
டெல்லி பிளே ஆஃப் வாய்ப்பு
டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல, இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று, பஞ்சாப் க்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால், பஞ்சாப் அணி, 17 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் செல்லும்.
மழைக்கு வாய்ப்பு
அதேவேளையில், மும்பையில் இன்று மழை பெய்ய 25% வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளதால், போட்டி தடைபடும் சூழல் உள்ளது.
இதன் காரணமாக, இன்றைய போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே மழையால் போட்டி கைவிடுவதை தவிர்க்க, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவ்வாறு மழை வந்தால், ஓவர்கள் குறைக்கப்படலாம் அல்லது போட்டி கைவிடப்படலாம். அப்படி போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு, மும்பை அணி 15 புள்ளிகளையும், டெல்லி அணி 14 புள்ளிகளையும் பெறும்.
டெல்லி பிளே ஆஃப் செல்ல பஞ்சாப் க்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி பெற்று, மும்பை தோற்றால் 16 புள்ளிகளுடன் பஞ்சாப் பிளே ஆஃப் செல்லும். மும்பை வென்று, டெல்லி தோற்றால், மும்பை 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்லும்.
இரு அணிகளும் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், மும்பை 17 மும்பை 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்லும். பஞ்சாப் 16 புள்ளிகளுடன் வெளியேறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |