மாத சம்பளமாக ரூ.2.5 லட்சம் பெறும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர் யார்?
கோல்ட்மேன் சாக்ஸில் மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்கினாலும் அதனை உதறி தள்ளிவிட்டு நபர் ஒருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பல லட்சம் சம்பள வேலையை விட்டவர்
ஐஐடி-கான்பூரில் (IIT-Kanpur) படித்த முன்னாள் மாணவர் ஆதித்யா (Aditya). இவர் இந்தியாவின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், லக்னோவைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவர் கடந்த 2023 -ம் ஆண்டில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவருடைய பள்ளி படிப்பை பொருத்தவரை 12 -ம் வகுப்புத் தேர்வுகளில் 95 சதவீத மதிப்பெண் பெற்றார். பின்னர், IIT-JEE தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.
இதையடுத்து 2014 ஆம் ஆண்டு JEE Advanced தேர்வில் தேர்ச்சி பெற்று அதில் கிடைத்த தரவரிசை (rank) காரணமாக கான்பூரில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) BTech படித்தார்.
இறுதியாக, MTech படிப்பில் முதுகலைப் பட்டப்படிப்பை கான்பூர் IIT-யில் முடித்து வேலைக்கு சேர்ந்தார்.
இவருக்கு மாத சம்பளம் ரூ.2.5 லட்சம் கிடைக்கும்படியான வேலை உலகளாவிய முதலீட்டு வங்கி நிறுவனமான Goldman Sachs-ல் கிடைத்தது.
இருந்தாலும் கனவுக்காக, UPSC 2022 தேர்வில் AIR 135 மதிப்பெண் பெற்று இந்திய காவல் பணிக்கு (IPS) தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இவர் இதோடு நின்று விடாமல் 2023 ஆம் ஆண்டில், UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று AIR 1 இடத்தை பிடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |