தோசை சாம்ராஜ்ஜியம்.., ரூ.60 கோடி மதிப்பிலான ராமேஸ்வரம் கஃபேயை இயக்குபவர்கள் யார்?
பிரபல நிறுவனமான ராமேஸ்வரம் கஃபே,பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு இன்று ரூ.60 கோடி சாம்ராஜ்யமாக மாறியுள்ளது.
ராமேஸ்வரம் கஃபே
ராமேஸ்வரம் கஃபே நாட்டிலுள்ள தென்னிந்திய உணவகங்களின் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனம் இன்று ரூ.60 கோடி சாம்ராஜ்யமாக மாறியுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருகிறது.
ராகவ் மற்றும் திவ்யா ஆகிய இருவர் இணைந்து நிறுவிய நிறுவனம் தான் ராமேஸ்வரம் கஃபே. கடந்த 2021-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தற்போது மிகப்பெரிய பிராண்டாக மாறியுள்ளது.
தற்போது, பாரம்பரியமான உணவுகளை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. குறிப்பாக, தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசை உணவுகள் இங்கு பெரும்பாலும் விரும்பப்படுகின்றன.
இதில், ராகவ் ஒரு நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர், பட்டப்படிப்பு முடித்து தொழில் செய்யலாம் என்று நினைத்துள்ளார். இட்லி, தோசை விற்கும் சாலையோர கடையை ஆரம்பிக்கலாம் என்று ராகவ் நினைத்துள்ளார்.
ஆனால், திவ்யா ஒரு பட்டய கணக்காளர் மற்றும் ஐஐஎம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவி. இவர், தனது கணவருடன் பக்கபலமாக நிற்க தனது வேலையை கைவிட்டார்.
இதையடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டில் பெங்களூரு குமரபார்க்கில் இட்லி மற்றும் தோசைகளை விற்பனை செய்யும் ஒரு சிறிய மையத்தை நிறுவி தனது முதல் வணிகத்தை ராகவ் தொடங்கினார்.
இது வெறும் ஐந்து ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது. ஆனால், தரம் மற்றும் நம்பகத்தன்மையில் கவனம் செலுத்தியது அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தியது.
இதனைத்தொடர்ந்து, இருவரும் சேர்ந்து 2021-ம் ஆண்டில் பெங்களூரு இந்திரா நகரில் ராமேஸ்வரம் கஃபேவை இணைந்து நிறுவினர். அப்போது தொடக்க நாளிலே சுமார் 1000 வாடிக்கையாளர் வந்தனர்.
இவர்களின் நோக்கம் என்னவென்றால் மலிவான விலையில் உயர்தர உணவுகளை வழங்க வேண்டும் என்பது தான். தற்போது, இந்நிறுவனமானது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
இதில், நிதி சார்ந்த பொறுப்புகளை திவ்யாவும், உணவகத்தின் செயல்பாடுகளை ராகவும் கவனித்து வருகின்றனர்.
ரூ.60 கோடி சாம்ராஜ்யத்தை கொண்டுள்ள இந்நிறுவனமானது பெங்களூரு, ஹைதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |