இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: விளக்கம் கேட்டுள்ள உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில், இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது.
இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்
இந்தியாவின் சில மாநிலங்களில் இருமல் மருந்தொன்றை உட்கொண்ட 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலியான விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மற்றும் மத்தியப்பிரதேசத்திலுள்ள Chhindwara என்னும் இரு நகரங்களில்தான் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பலியாகியுள்ளார்கள்.
பிள்ளைகளில் பலருக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, டயாலிசிஸ் செய்யப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்கள்.
மத்தியப்பிரதேசத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐந்து பிள்ளைகள் சிறுநீரகப் பிரச்சினைகள் காரணமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
விளக்கம் கேட்டுள்ள உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில், இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டுள்ளது.
Coldrif syrup எனப்படும் அந்த பாதிக்கப்பட்ட இருமல் மருந்தை இந்தியா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதா என்பது குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக ராய்ச்சர்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அப்படி அந்த மருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை இந்திய அரசு உறுதி செய்யும் பட்சத்தில், அந்த மருந்து குறித்து உலக அளவில் எச்சரிக்கை செய்யவேண்டிய தேவை உள்ளதா என்பது குறித்து மதிப்பீடு செய்ய இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |