மகாளய அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்? விரதம் மேற்கொள்வது எப்படி?
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்தவகையில் இன்று மகாளய அமாவாசை ஆகும். இந்த நாளில் யார் அமாவாசை விரதம் இருக்க வேண்டும் என்பதை விரிவாக, எப்படி விரதம் இருக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?
- தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
- கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் விரதம் இருக்கும் முறை
- திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
- பெண்ணிற்கு சகோதர்கள் இருப்பின் அவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள்.
- அப்பா இல்லை என்றால் அம்மா தர்ப்பணம் கொடுப்பார், விரதம் இருப்பார்.
- அம்மா இல்லை என்றால் அப்பா தர்ப்பணம் கொடுப்பார், விரதம் இருப்பார்.
- அப்படி சகோதர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம், வீட்டிற்கு வந்து நான்கு பேருக்கு இலையில் சோறு போட்டு உணவளிக்கலாமே தவிர அமாவாசை விரதத்தை பெண் ஒருவர் கடைப்பிக்கக் கூடாது.
ஆண்கள் விரதம் இருக்கும் முறை
- ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- அமாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும்.
- கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
- அமாவாசை தினத்தில் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
- இயன்றவரை யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்.
பலன்கள்
அமாவாசை தினத்தில் முன்னோருக்கு வழிபாடு நடத்துவது அவசியம். தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளும் நல் பலனை பெறுவார்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.