இவர்கள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாதாம்.... ஏன் தெரியுமா?
பொதுவாகவே அனைவரையும் மரக்கறி சாப்பிடச் சொல்வது வழக்கம் தான். அதிலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மரக்கறி மாத்திரமே சாப்பிட வேண்டும் என்றும் அறிவுரை கூறுவார்கள்.
ஆகவே பெரும்பாலும் பலர் இந்த மரக்கறியை எடுத்துக்கொள்வார்கள். அதிலும் ஒரு சிலருக்கு ஒரு சில மரக்கறியினால் வேறு தீமைகள் ஏற்படும்.
அவ்வாறன ஒன்று தான் கத்திரக்காய், கத்தரிக்காயில் விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவே இருகின்றது.
ஆனால் இதை சாப்பிடுவது ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படவும் வழிவகுக்கும். அது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
கத்திரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள்
கத்தரிக்காயில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் உள்ளன. இதை சாப்பிடுவதால் இவ்வாறான நன்மைகள் ஏற்பட்டாலும் ஒரு சிலர் சாப்பிக்கூடாது.
ஆகவே யார் எல்லாம் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- எது சாப்பிட்டாலும் எதுக்களித்து மந்தம் தட்டும் எனில் நீங்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- சரும எரிச்சல், அரிப்பு இருப்பின் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும்.
- மன அழுத்தம் காரமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிரத்துக்கொள்ளவும்.
- இரத்த ஓட்டம் சீராக இல்லை. குறைவான இரத்தமே உள்ளது எனில் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது. இது ரத்த சோகை பிரச்சினையை ஏற்படுத்தும்.
- கண்களை சுற்றி அரிப்பு, எரிச்சல், பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.
- மூல நோய் இருப்பின் கத்தரிக்காய் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இது பிரச்சினையை தீவிரமாக்கும்.
- கத்தரிக்காயில் உள்ள ஆக்ஸலேட் சிறுநீரகத்தில் கற்கள் வருவதை அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |