எலுமிச்சையை யாரெல்லாம் தங்கள் உணவில் சேர்க்கக்கூடாது ? மீறி சேர்த்தால் என்ன நடக்கும்?
பொதுவாக எலுமிச்சையில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. எலுமிச்சை உணவுப்பொருளாகவும் மருந்தாகவும் நமக்கு பயன்படுகிறது. மேலும் திருஷ்டி பரிகாரங்களுக்கும், மந்திர தந்திர காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
எலுமிச்சையில் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பெற அளவாக சாப்பிடுவதே நல்லது. அளவுக்கு மிஞ்சினால் எலுமிச்சையும் நஞ்சாகிவிடும்.
அந்தவகையில் யாரொல்லாம் எலுமிச்சையை எடுக்ககூடாது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
- கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும். இப்படி இரும்புச்சத்து மாத்திரைகளை எடுப்பவர்கள் எலுமிச்சையை எடுக்காதீர்கள். ஏனெனில் இது இம்மாத்திரைகளின் விளைவை நடுநிலையாக்கிவிடும்.
- அல்சர் அல்லது வயிற்றில் புண் இருப்பவர்கள், எக்காரணம் கொண்டும் எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், வயிற்றில் உள்ள புண்ணை மேலும் பெரிதாக்கி, நிலைமையை மோசமாக்கிவிடும்.
- உங்களுக்கு பல் கூச்சம் இருந்தால், எலுமிச்சையை எடுக்காதீர்கள். ஏனென்றால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பற்களின் எனாமலை சேதப்படுத்திவிடும். அதேப்போல் பற்களைத் துலக்கியதும் எலுமிச்சை நீரை அருந்தாதீர்கள். இல்லாவிட்டால், அது பற்களை பலவீனமாக்கும்.
- காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிக்கும் போது இது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு அசிடிட்டி ஏற்கனவே இருந்து, எலுமிச்சை நீரைக் குடித்தால், அது வயிற்று காயத்தை தீவிரமாக்கிவிடும்.
- வாய்ப்புண் இருப்பவர்கள் அமிலத்தன்மை அதிகம் கொண்ட எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது வாய்ப்புண்ணை பெரிதாக்குவதோடு, எரிச்சலையும் உண்டாக்கும்.
- நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனையைக் கொண்டவர்கள் எலுமிச்சையை உட்கொள்ளக்கூடாது. ஒருவேளை உட்கொண்டால், அது அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.
- எலுமிச்சைசாற்றினை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக சென்சிடிவ் சருமத்தினர் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் எரிச்சல், அரிப்பு மற்றும் பருக்களை உண்டாக்கும்.
குறிப்பு
எக்காரணம் கொண்டும் எலுமிச்சையை பால், பப்பாளி, இறைச்சி, தயிர், தக்காளி, பால் பொருட்களுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இந்த உணவுகளுடன் சேர்ந்தால், அது வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.