இந்தியாவில் முதல் செல்போன் அழைப்பு பேசியது யார் தெரியுமா? ஒரு நிமிட கட்டணம் இவ்வளவா?
இன்றைய AI காலத்தில் செல்போன் இல்லாத மனிதர்களை காண்பது அரிதிலும் அரிது. தற்போது மணிக்கணக்கில் யாருடன் வேண்டுமானாலும் பேசி விட முடியும்.
அதேவேளையில், இந்தியாவில் முதலில் செல்போனில் பேசியது யார், அப்போது என்ன கட்டணம் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் முதலில் செல்போன் அழைப்பு
இந்தியாவில் முதல் செல்போன் அழைப்பு, ஜூலை 31, 1995 அன்று மேற்கொள்ளப்பட்டது.
முதல் அழைப்பில், நோக்கியா போனை பயன்படுத்தி, அன்றைய மத்திய தகவல் அமைச்சர் சுக்ராமிடம், அன்றைய மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு பேசினார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா மற்றும் தேசிய தலைநகர் டெல்லி ஆகிய இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையேயான அழைப்பு, இந்தியாவின் பி.கே. மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா இடையேயான கூட்டு முயற்சியான மோடி டெல்ஸ்ட்ரா நெட்வொர்க்கில் செய்யப்பட்டது.
அன்றைய காலத்தில், ஒரு நிமிடத்திற்கு பேச ரூ. 8.40 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. பீக் ஹவரில் நிமிடத்திற்கு ரூ. 16.80 ஆக வசூலிக்கப்பட்டது.
அதன் பிறகு படிப்படியாக 2G தொடங்கி தற்போது 5G வரை பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. தற்போது அன்லிமிடெட் கால் பேசும் பேக்கேஜ் உள்ளது.
2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அம்பானியின் ஜியோவால், நாட்டின் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட புரட்சி மூலம், உலகிலேயே மலிவான மொபைல் கட்டணத் திட்டங்களில் ஒன்றையும் இணையக் கட்டணங்களையும் கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |