அம்பானி குடும்பத்தினருக்காக ஞாயிற்றுக்கிழமையில் சமைக்கும் அந்த பெண் யார் தெரியுமா?
ஆனந்த் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.
மூன்று நாள் விழாக்களில் உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் உட்பட மிகவும் பிரபலமான விருந்தினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
அந்தவகையில் அம்பானி குடும்பத்தினருக்காக சமையல் செய்யும் ஒரு பெண்ணும் கலந்துக்கொண்டுள்ளார். அவரிடம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆசீர்வாதம் வாங்குவது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
யார் அந்த பெண்?
1936 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தென்னிந்திய உணவுகளுக்கான மும்பையில் உள்ள பழமையான உணவகம் Cafe Mysore ஆகும். அதன் உரிமையாளர் தான் சாந்தேரி நாயக்.
இவர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டுட் உரையாடலில் இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், நாங்கள் எங்கள் வீட்டில் உங்கள் உணவை சாப்பிடுகிறோம்." "உங்களால் தான் நாங்கள் இவ்வளவு சுவையான உணவை உண்கிறோம்" என்று ஆனந்த் அம்பானி அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
Cafe Mysore உரிமையாளருக்கு ஷ்லோகா மேத்தாவுடன் ஆனந்த் பிரமல் வாழ்த்து தெரிவிப்பதையும் குறித்த வீடியோவில் காணலாம்.
முகேஷ் அம்பானி தனது விருப்பமான உணவு இட்லி சாம்பார் என்றும், இன்றுவரை Cafe Mysore இல் உண்பதாகவும், 1974 முதல் 1979 வரை மாணவராக இருந்தபோது சாப்பிட்ட உணவகம் என்றும் முகேஷ் அம்பானி அடிக்கடி கூறியிருக்கிறார்.
ஆடம்பரமான 3 நாள் திருமண விழாவை ஏற்பாடு செய்த பிறகு, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஜூலை 15 அன்று, அம்பானி குடும்பத்தின் வீட்டு ஊழியர்கள் மற்றும் ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு மட்டுமே திருமண வரவேற்பை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |