தமிழகத்தில் இருக்கும் TOP 5 ஐஏஎஸ் அதிகாரிகள் யார் யார் தெரியுமா?
தமிழகத்தில் சிறப்புக்கு உரியவர்களாக டாப் 5 இடங்களில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
யார் யார்?
தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அதிகாரிகளை நியமிப்பதில் கவனமாக இருந்தார். திமுக அரசின் செயல்பாடுகள் மீது ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
அடுத்த சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், முதலமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்குவதில் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இப்போது நாம் தமிழகத்தில் இருக்கும் TOP 5 ஐஏஎஸ் அதிகாரிகள் யார் என்பதை பார்க்கலாம்.
எஸ்.முருகானந்தம் ஐஏஎஸ்
தற்போது தலைமை செயலாளர் பதவியில் இருக்கும் எஸ்.முருகானந்தம் ஐஏஎஸ் எந்தவொரு வேலையை கொடுத்தாலும் திறம்பட செய்து முடிக்கிறார்.
இவருக்கு நிதித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் இருப்பதால் முதலில் நிதித்துறை செயலாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்திருந்தார்.
கடந்த 2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு உறுதுணையாக இருந்தார்.
உமாநாத் ஐஏஎஸ்
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல்நிலை செயலாளராக இருக்கும் உமாநாத் ஐஏஎஸ், முக்கிய ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
இவர், 30 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடியவர்களுக்கு 2011ஆம் ஆண்டு பட்டா வாங்கி கொடுத்துள்ளார். எளிய மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது, அவர்களுக்கு அடிப்படை செய்து கொடுப்பதில் முக்கியமானவர்.
மேலும், கடந்த 2010-ம் ஆண்டில் கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி அப்போதைய முதலமைச்சரான கருணாநிதியின் பாராட்டை பெற்றுள்ளார்.
சண்முகம் ஐஏஎஸ்
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் நிலை செயலாளராக இருக்கும் சண்முகம் ஐஏஎஸ் மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
இவர், மனு கொடுக்க வரும் மக்களுக்கு குடிநீர், இருக்கை, மேற்கூரை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார்.
இவர், 2011-ம் ஆண்டில் கடலூர் தானே புயல் பாதிப்புகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை திறம்பட செய்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அனு ஜார்ஜ் ஐஏஎஸ்
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூன்றாம் நிலை செயலாளராக இருக்கும் அனு ஜார்ஜ் ஐஏஎஸ், பல்வேறு துறைகளை மேற்பார்வை செய்து வருகிறார்.
இவர், அரியலூரில் பெண் சிசுக் கொலை, குழந்தை திருமணம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார். பெண்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் இவர்.
லட்சுமிபதி ஐஏஎஸ்
2014 தமிழ்நாடு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இணைச் செயலாளராக உள்ளார். இவர், செங்கல்பட்டு துணை ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
இவர், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், நேர்மையான அதிகாரி என்றும் பெயர் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |