தமிழகத்தில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் நீண்ட காலமாக முதலமைச்சராக ஆட்சி செய்தவர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
சுதந்திரத்திற்குப் பிறகு மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ராஜாஜி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்ததால் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த ராஜாஜி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் காமராஜர் முதலமைச்சரானார்.
காமராஜர் தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக இருந்து 9 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார். 1963ஆம் ஆண்டு K-Plan திட்டத்தின் கீழ் அவர் பதவி விலகினார்.
1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அண்ணாதுரை முதலமைச்சரானார்.
அவரது ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர்1969ஆம் ஆண்டு அவர் மறைந்தார்.

அதனைத் தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சரானார். 1971ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைத்தாலும், நெருக்கடி நிலை காலத்தில் அவரது அரசு கலைக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தார்.
எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக தொடங்கி, 1977ஆம் ஆண்டு முதலமைச்சரானார். தொடர்ந்து 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் வெற்றி பெற்று சுமார் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஜெயலலிதா 6 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். 1991ஆம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்ற அவர் 2011 மற்றும் 2016 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். அவர் சுமார் 4 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
2021ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தற்போது வரை அவர் பதவியில் உள்ளார்.
அந்தவகையில், தமிழ்நாட்டில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் திமுக தலைவரான கருணாநிதி முதலிடத்தில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |