முன் ஜென்மத்தில் நீங்கள் யார்! மகம் நட்சத்திரத்தின் முன் ஜென்ம ரகசியங்கள்!
மகம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும். சிம்ம ராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று.
உங்கள் உடலில் பலவீனமான உறுப்பு எது தெரியுமா?
முதுகுத்தண்டு தான் உங்கள் உடலிலேயே மிகவும் பலவீனமான உறுப்பாக இருக்குமாம். முதுகு வலி அடிக்கடி ஏற்படுமாம்.
நீங்கள் முன் ஜென்மத்தில் எங்கு பிறந்திருப்பீர்கள்?
நீங்கள் கண்டிப்பாக நகரத்தில் தான் பிறந்து வளர்ந்து இருப்பீர்களாம்.
உங்கள் முன் ஜென்ம சுபாவம் என்ன?
அறிவுக்கூர்மை அதிகமுள்ள ஞானியாக இருந்திருப்பீரகள்.உங்களை கண்டு நிறைய பேர் மயங்கியிருப்பார்கள்.மற்றும் புகழுக்கு அடிமையான ஆட்களாக இருப்பீர்கள்.
முன் ஜென்ம ராசி நிறம் என்ன?
உங்களுகக்கான முன் ஜென்ம ராசி நிறம் சிவப்பு நிறமாகும்.
உங்கள் ராசிக்கு வலிமையான நேரம் என்ன தெரியுமா?
பகல் நேரம் தான் உங்களுக்கான நேரம் ,பகல் நேரத்தில் தான் அதிக செயற்றிறனோடு இருப்பீர்களாம்.மற்றும் வலிமையாக இருப்பீர்களாம்.
முன் ஜென்மத்தில் நீங்கள் வாழ்ந்த திசை என்ன?
நீங்கள் முன் ஜென்மத்தில் தென் மேற்கு திசையில் தான் வாழ்ந்து இருப்பீர்களாம்.அந்த திசையில்தான் பிறந்து வளர்ந்து இருப்பீர்களாம்.
போன ஜென்ம பிறப்பு என்ன?
முந்தைய ஜென்மத்தில் நீங்கள் நிச்சயமாக ஆவணி மாதத்தில் தான் பிறந்து இருப்பீர்களாம்.உங்களுக்கும் ஆவணி மாதத்திற்கான தொடர்பு இருந்துக்கொண்டே இருக்குமாம்.
முன் ஜென்ம நட்சத்திரம் என்ன?
முன் ஜென்மத்தில் நீங்கள் மேஷ ராசி அஷ்வினி நட்சத்திரத்தில் பிறந்து இருப்பீர்கள்.
முன் ஜென்ம வேலை என்ன?
முன் ஜென்மத்தில் நீங்கள் அறிவை போதிக்கும் வேலையோ அல்லது மத போதகராகவோ இருந்திருப்பீர்கள்.ஆகையால் தான் உங்களுக்கு கலை சார்ந்த உணர்வுகள் அதிகமாக இருக்கும். அதுவே பெண்கள் எனில் அரச குலத்தில் ஆட்சி செய்பவர்களாக இருந்து இருப்பார்கள்.
முன் ஜென்ம புண்ணியம் என்ன?
நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்னவெனில் நியாயத்தை மட்டுமே பேசியிருப்பீர்கள் உங்கள் முன் அதர்மமாக நடக்க வாய்ப்பே இருக்காது.அவ்வளவு நியாயமாக இருப்பீர்கள்.
முன் ஜென்ம துணை யார்?
உங்கள் முன் ஜென்ம துணை எந்த ராசி நட்சத்திரமாக இருந்து இருப்பார்கள் எனில் சிம்ம ராசி மற்றும் துலாம் ராசி அல்லது தனுசு ராசியில் பிறந்திருப்பார்கள்.கூடுதலாக சுவாதி நட்சத்திரத்திலேயே உங்கள் முன் ஜென்ம துணை இருந்திருப்பார்கள்.
முன் ஜென்மத்தில் செய்த பாவம்?
தாய் தந்தையருக்கு செய்யவேயண்டிய பணிவிடையை செய்யாமல் இருந்திருப்பீர்கள்.இது இந்த ஜென்மத்திலேயும் தொடரும்.
முன் ஜென்ம நட்பு எப்படி இருந்திருக்கும்?
முன் ஜென்மத்தில் அதிக ஆண் நட்பு இருந்திருக்கும். ஆனால் இந்த ஜென்மத்தில் அதிக பெண் நட்பு காணப்படும்.