பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமர் யார்?
பிரான்ஸ் பிரதமரான மிஷெல் பார்னியேர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசு கவிழ்ந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரான்சின் அடுத்த பிரதமர் யார்?
பிரான்சின் அடுத்த பிரதமராக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் யாரைத் தேர்ந்தெடுப்பார் என்பது தொடர்பில் பிரெஞ்சு ஊடகங்கள் சில கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி பிரான்சின் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவர்கள் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Sébastien Lecornu
செபாஸ்டியன் (38), Les Républicains கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் முன்னாள் பிரதமர்களான எலிசபெத் போர்ன், கேப்ர்யல் அட்டால் மற்றும் மிஷெல் பார்னியேர் அரசாங்கங்களில் ராணுவ அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.
The Republicans கட்சியிலிருந்து வெளியேற்ய செபாஸ்டியன் 2017ஆம் ஆண்டு இமானுவல் மேக்ரானுடைய Renaissance கட்சியில் இணைந்தார்.
François Bayrou
ஃப்ரான்கோயிஸ் (73), Democratic Movement கட்சியைச் சேர்ந்தவர்.
Pau நகரின் நீண்டகால மேயராக இருந்த அவர், 2017ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிலாக, அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார்.
அவருக்கு மேக்ரான் நீதித்துறை அமைச்சர் பொறுப்பளிக்க, சில வாரங்களில் மோசடி குற்றச்சாட்டு காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது அவர் குற்றமற்றவர் என முடிவாகியுள்ளது.
Bernard Cazeneuve
Socialist Partyயின் மூத்த உறுப்பினராக இருந்த பெர்னார்ட் (61), சில மாதங்கள் பிரதமராகவும், 2015 தீவிரவாதிகள் தாக்குதலின்போது உள்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
Xavier Bertrand
சேவியர் (59), Jacques Chirac மற்றும் Nicolas Sarkozy ஆகியோரின் ஆட்சிக்காலத்தின்போது அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.
François Baroin
பரோயின் (59), ஐரோப்பிய கடன் நெருக்கடி காலகட்டத்தில் சிறிது காலம் நிதி அமைச்சராகவும், பட்ஜெட் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
அத்துடன், அவர் 1995ஆம் ஆண்டு முதல் Troyes நகரின் மேயராகவும் இருந்துவருகிறார்.
பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமராக இவர்களில் ஒருவரை இமானுவல் மேக்ரான் தேர்ந்தெடுக்கக்கூடும் என பிரெஞ்சு பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |