பிக்பாஸில் இந்த வாரம் நடக்கும் டபுள் எவிக்ஷன்.., வெளியேறப்போகும் 2 பேர் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
24 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தற்போது பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், செளந்தர்யா, ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இதில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ரயான் வெற்றி பெற்றதால், இந்த சீசனில் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துள்ளார் ரயான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர்.
ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இந்த வாரம் கம்மியான வாக்குகள் வாங்கியுள்ள போட்டியாளர்கள் என்றால் அது மஞ்சரி, பவித்ரா மற்றும் அருண் பிரசாத் தான்.
இதில் மஞ்சரிக்கு மிகவும் கம்மியான வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆவது உறுதி.
இன்னொரு எவிக்ஷனில் பவித்ரா அல்லது அருண் எலிமினேடாக அதிக வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |