ரூ.2000 கோடி வெற்றி மடிக்கணினி திட்டம்; யாருக்கெல்லாம் கிடைக்கும்?
who will get laptop from vetri laptop scheme: வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வர் விஜய், யாருக்கெல்லாம் மடிக்கணினி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
ரூ.2000 கோடி வெற்றி மடிக்கணினி திட்டம்
கல்லூரி மாணவ, மாணவிகளின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில், வெற்றி இலவச மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
மேலும், கடந்த 2025-2026 கல்வியாண்டில் லேப்டாப் பெறாத அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளின் 3 ஆம் மற்றும் 4 ஆம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் தொழில்நுட்ப கல்விதேவைகளை கருத்தில் கொண்டு, intel i5 மற்றும் அதற்கு இணையான உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற உயர்ந்த நோக்கத்தில், கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 7, 2026
இந்த திட்டத்தை கண்காணித்து, தொய்வின்றிச் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.
தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்ய தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு (ELCOT) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.