இன்றைய Eliminator போட்டியில் வெளியேறப் போவது யார்? RCB, RR பலப்பரீட்சை
ஐபிஎல் 2024 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
எலிமினேட்டர்
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த குவாலிபையர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றது.
இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள மோதலில் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 24ஆம் திகதி நடைபெற உள்ள குவாலிபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
Hang it in the Louvre ?
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 22, 2024
Virat ➡️ Ahmedabad ➡️ Entertainment ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/HqSzSEXBbD
பாப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணியில் கோலி, பட்டிதார், கிரீன் ஆகியோர் துடுப்பாட்டத்தில் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
கிளென் மேக்ஸ்வெலும் அதிரடி காட்ட ஆரம்பித்த RCB அணி எளிதாக 200 ஓட்டங்களை தாண்டிவிடும். ஆனால் பந்துவீச்சைப் பொறுத்தவரை அச்சுறுத்தக்கூடிய வீரர் என்று யாரையும் கூற முடியாத நிலையில் RCB அணி உள்ளது.
The moment we’ve all been waiting for the last 3 weeks is finally here! ?
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 22, 2024
We’re coming in hot for tonight’s Eliminator. You ready, 12th Man Army? ?
Watch #RRvRCB live on @JioCinema.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/AAVlPqN2d7
சிராஜ், பெர்குசன், யஷ் தயால் வேகப்பந்துவீச்சிலும் , கரண் ஷர்மா மற்றும் ஸ்வப்னில் சிங் சுழற்பந்துவீச்சிலும் கைகொடுத்தால் ராஜஸ்தானின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்.
பரபரப்பான போட்டி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை பட்லர் இல்லாதது தொடக்கத்தில் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனாலும் ஜெய்ஸ்வால் அதிரடி காட்டும் பட்சத்தில், சாம்சன், பராக் மற்றும் பவல் மிரட்டினால் பாரிய ஸ்கோரை அணி எட்டும்.
Big day. Big game. Sanju and Co. vs Faf and Co. It’s a decider at Narendra Modi Stadium and here’s all you need to know! ??
— Rajasthan Royals (@rajasthanroyals) May 22, 2024
எனினும் பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி RCB அணியை விட சற்று பலம் வாய்ந்தது. ஏனெனில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின், சஹால் அணியில் உள்ளனர்.
அதேபோல் டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான் மற்றும் சந்தீப் ஷர்மா மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுகின்றனர். எனவே ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிப்பதே பெங்களூரு அணிக்கு சவாலானதாக இருக்கும். எப்படியாயினும் இன்றையப் போட்டியானது பரபரப்பானதாக இருக்கும்.
Almost time... ? pic.twitter.com/1IdJCSP54V
— Rajasthan Royals (@rajasthanroyals) May 22, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |