‘உன் பின்னால இந்தியாவே இருக்கு’..! நியூசிலாந்துக்கு பந்து வீசும் போது பவுலரிடம் கூறிய ஸ்காட்லாந்து விக்கெட் கீப்பர்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்துவீசும் போது பவுலரிடம் ‘உன் பின்னால இந்தியாவே இருக்கு’ என கூறி ஸ்காட்லா்நது விக்கெட் கீப்பர் உத்வேகப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியா சூப்பர் 12 சுற்றில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் பெரிய தோல்வியடைந்துள்ளதால் அரையிறுதி வாய்ப்பு கடினமாகியுள்ளது.
ஆனாலும், இந்திய அணி இன்னும் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அதாவது, குரூப் 2 இல் மீதமுள்ள சூப்பர் 12 போட்டிகளில் மற்ற அணிகள், குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் எவ்வாறு விளையாடுகின்றன என்பதைப் பொறுத்து இந்திய அணிக்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டியில் நியூசிலாந்து-ஸ்காட்லாந்து விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஸ்காட்லா்ந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸின் 7வது ஓவரை ஸ்காட்லாந்து வீரர் Chris Greaves வீசினார்.
அப்போது, ‘உன் பின்னால இந்தியாவே இருக்கிறது’ என ஸ்காட்லாந்து விக்கெட் கீப்பர் Cross, பவுலர் Chris Greaves-யிடம் கூறி உத்வேகப்படுத்தினார்.
குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஒருவேளை ஸ்காட்லாந்திடம் நியூசிலாந்து தோற்றால், இந்தியா அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு சற்று அதிகரிக்கும்.