WWE-இல் அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார் தெரியுமா?
பொதுவாகவே ஒவ்வொரு துறையிலும் சம்பாதிப்பது என்பது எளிதாக விடயமில்லை. நீங்கள் எந்தளவிற்கு உங்களது முயற்சியை காட்டுகின்றீர்கள் என்பதில் தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது.
அந்தவகையில் உலகின் மிகப்பெரிய ரெஸ்லிங் நிறுவனம் WWE தனது வீரர்களுக்கு அதிகளவில் சம்பளம் வழங்குவதில் பெயர்ப் பெற்ற நிறுவனமாகும்.
அந்த வகையில் WWE இல் அதிக சம்பளம் பெறும் வீரர்கள் யார் என இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
அதிக சம்பளம் பெறும் வீரர் யார்?
1953 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த WWE தற்போது 250 மல்யுத்த வீரர்களை கொண்டுள்ளது. இவர்களுக்கென கோடிக் கணக்கில் ரசிகர்களும் உள்ளனர்.
அந்தவகையில் WWE இல் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில், முதலிடத்தில் பிராக் லெஸ்னர் (Brock Lesnar) என்பவர் இருக்கிறார். இவருக்கென கோடிக்கணக்கில் ரசிகர்களும் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் படி, WWE இல் பிராக் லெஸ்னர் (Brock Lesnar) ஒரு வருடத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகின.
WWE மட்டும் அவருக்கு வருடத்திற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 12 மில்லியன் டாலர்கள் கிடைக்கப் பெற்றன.
WWE தவிர பிராண்ட் அம்பாசிடர்ஷிப் மற்றும் பிற தொழில்கள் என இவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
பிராக் லெஸ்னர் சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டு வீரராக இருந்துள்ளார்.
பிறகு அவர் மல்யுத்தத்தை தேர்வு செய்து WWE இல் இணைந்தார் எனவும் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் ரோமன் ரெயின்ஸ் (Roman Reigns) 42 கோடி (5 மில்லியன் டாலர்) சம்பளம் பெற்று இரண்டாவது இடத்திலும், ரேண்டி ஆர்டன் (Randy Orton) 37 கோடி (4.5 மில்லியன் டாலர்) சம்பளம் பெற்று மூன்றாவது இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |