மகாராணி இறந்ததற்கு கனடாவில் விடுமுறை எதற்கு?: உருவாகியுள்ள புதிய சர்ச்சை
பிரித்தானிய மகாராணியார் இறந்ததற்கு கனடாவில் சில மாகாணங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள விடயத்தால் சர்ச்சை உருவானது.
தற்போது மகாராணி இறந்ததற்கு கனடாவில் விடுமுறை எதற்கு என கேள்வி எழுந்துள்ளது.
பிரித்தானிய மகாராணியார் இறந்ததற்கு கனடாவில் சில மாகாணங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள விடயம் ஏற்கனவே சர்ச்சையை உருவக்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் புதிதாக ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணியார் மறைந்த விடயம் ஒரு தரப்பினருக்கு துக்கத்தை உருவாக்கியுள்ள நிலையில், முன்னர் பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளும், பிரித்தானிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களும் தங்கள் மூதாதையர்கள் அனுபவித்த கஷ்டங்களை நினைவுகூரத்துவங்கியுள்ளார்கள்.
Logan Perley/CBC
அவ்வகையில், பிரித்தானிய மகாராணியார் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில், கனடாவில் வரும் 19ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணியாரின் மரணத்துக்கு விடுமுறை அளிக்கும் அரசு, கொல்லப்பட்ட பூர்வக்குடியின பிள்ளைகளின் நினைவாக அனுசரிக்கப்பட்ட Truth and Reconciliation Day என்னும் நிகழ்வுக்கு விடுமுறை அளிக்காதது ஏன் என பூர்வக்குடியின தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Alexandre Silberman/CBC
ஒருவர் மரனமடைந்தால் அவருக்காக துக்கம் அனுஷ்டிப்பது முறையானதுதான். ஆனால், ஆயிரக்கணக்கான பூர்வக்குடியின பிள்ளைகள் கொலை செய்யப்பட்டார்களே, உண்டுறை பள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறார்களே, அவர்களுக்காக ஏன் விடுமுறை அளிக்கப்படவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.
ஏற்கனவே கனடா பணத்தில் இருக்கும் பிரித்தானிய மகாராணியாரின் உருவத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மன்னர் சார்லஸ் உருவத்தைப் பொறிப்பதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், தற்போது மகாராணியார் மரணத்துக்காக விடுப்பு அளிக்கப்படும் விடயமும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
100% this ⬇️. ? Sitansisk. https://t.co/Xa718BtDOk
— Susan Holt (@susanholt) September 14, 2022