விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.., ஏன் தெரியுமா?

By Yashini Jul 23, 2026 06:59 AM GMT
Report

பொதுவாக, விமானத் துறையில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, விமானங்களில் பணிபுரியும் கேபின் குழுவினரில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆனால், விமானப் போக்குவரத்து தொடங்கிய காலத்தில் நிலைமை வேறுபட்டிருந்தது.

1912ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த DELAG விமான நிறுவனத்தில் பணியாற்றிய ஹென்ரிச் குபிஸ், வரலாற்றின் முதல் விமானப் பணிப்பாளராகக் கருதப்படுகிறார்.  

அந்தக் காலகட்டத்தில் கேபின் குழுவினராக ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர்.

விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.., ஏன் தெரியுமா? | Why Air Hostess Are Always Female In Tamil

பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதைவிட, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே கேபின் குழுவினரின் முக்கியப் பணியாக இருந்தது.

இதனால், விமான நிறுவனங்கள் ஆண்களையே அதிகம் பணியமர்த்தின. இதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் எலன் சர்ச்.

பதிவு பெற்ற செவிலியரான இவர், 1930ஆம் ஆண்டு போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக இணைந்தார்.  

இதன் பின்னர், பயணிகளைக் கவனித்துக்கொள்ள பெண் செவிலியர்களை விமான நிறுவனங்கள் அதிகளவில் பணியமர்த்தத் தொடங்கின.

இதன் காரணமாக, விமானப் பணிக்குழுவில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.., ஏன் தெரியுமா? | Why Air Hostess Are Always Female In Tamil

மேலும், பெண்களின் வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்களும் இந்தத் துறையில் அவர்களுக்கு சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. 

20ஆம் நூற்றாண்டின் மத்தியில், விமான நிறுவனங்கள் பெண் பணியாளர்களின் வயது, எடை, திருமண நிலை மற்றும் தோற்றம் தொடர்பாக கடுமையான விதிமுறைகளை வகுத்தன.

பெண்களின் தோற்றத்தை வணிக ரீதியாக பயன்படுத்தியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது, பல விமான நிறுவனங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கேபின் குழுவில் பணியாற்றுகின்றனர்.

இதனால், விமானப் பணிக்குழு என்றாலே பெண்கள் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US