விமானத்தில் ஏறும்போது பணிப்பெண்கள் வணக்கம் கூறுவது உண்மையில் எதற்காக?
விமானத்தில் ஏறும்போது, விமானப் பணிப்பெண்கள், முகம் முழுக்கப் புன்னகையுடன் பயணிகளுக்கு வணக்கம் சொல்வதுண்டு என்பது விமானத்தில் பயணிப்பவர்களுக்கு நன்கு தெரிந்த விடயம்தான்.
ஆனால், அவர்கள் வணக்கம் சொல்வது உங்களை வரவேற்க மட்டும் இல்லையாம். அதற்குப் பின்னால் வேறொரு காரணம் இருக்கிறது என்கிறார் விமான பணிப்பெண் ஒருவர்.
உண்மையான காரணம் இதுதான்...
அதாவது, விமானத்தில் ஏறும் பயணி குடிபோதையில் இருக்கிறாரா அல்லது அவரால் பயணிக்க முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை தெரிந்துகொள்வதற்காகவே விமானப் பணிப்பெண்கள் விமானத்தில் ஏறும் பயணிகளுக்கு வணக்கம் கூறுவதாக தெரிவித்துள்ளார் விமானப் பணிப்பெண் ஒருவர்.
@mrsmiva Also to see who you could help us in an emergency. #flightattendant #cabincrew #stewardess #fyp #flightcrew #explore #cabincrewlife #airplanes #airplane #flightattendants #aircraft #aviation #fly #flying #stewardesslife ♬ RUN THIS TOWN X GANGSTAS PARADISE - ALTÉGO
மற்றொருவரோ, அதுமட்டுமின்றி, விமான பயணத்தின்போது ஏதாவது அவசரநிலை ஏற்பட்டால், இந்த பயணியால் நமக்கு உதவி செய்யமுடியுமா என்பதைக் கண்டறிவதற்கும் இந்த வரவேற்பும் வணக்கமும் உதவும் என்கிறார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |