மருத்துவம் பயில்வதற்காக ஜேர்மனிக்கு குடிபெயர்ந்துள்ள அமெரிக்க இளம்பெண்: கூறும் காரணம்
மேல்படிப்புக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குச் செல்லும் நிலையில், அமெரிக்க இளம்பெண்ணொருவர் மருத்துவம் பயில்வதற்காக ஜேர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
கூறும் காரணம்
எரிக்கா ராபர்ட்ஸ் (27) என்னும் அமெரிக்க இளம்பெண், ஜேர்மனியில் மருத்துவம் பயின்றுவருகிறார்.

அவர் எதற்காக ஜேர்மனியை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணத்தை சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார் எரிக்கா.
ஜேர்மனியின் மியூனிக் தொழில்நுட்ப பல்கலையில் சேர்ந்துள்ள எரிக்கா, பல்கலையில், மாணவர்களுக்கான தங்கும் அனுமதி தனக்கு கிடைத்துள்ளதுடன், கல்விக்கட்டணமும் மிகவும் குறைவு என்கிறார்.
ஒரு செமஸ்டருக்கான கல்விக் கட்டணம் வெறும் 100 டொலர்கள்தான் என்கிறார் எரிக்கா.
நகரில் நடமாட சுதந்திரம் இருப்பதுடன், புதிய நண்பர்கள் பலர் தனக்குக் கிடைத்துள்ளதாகவும், புதிய கலாச்சாரத்தை அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கும் எரிக்கா ஒரே ஒரு விடயத்தை மட்டும் மிஸ் பண்ணுகிறாராம்.
தன் குடும்பத்தை மட்டும் மிஸ் பண்ணுவதாகத் தெரிவிக்கும் எரிக்கா, அத்துடன், அமெரிக்காவை விட இங்கு குளிர்காலம் குறைவாகவே உள்ளதையும் குறிப்பிடுகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |