நோய்க்கு மருந்தாக விஷப்பாம்பை உயிரோடு விழுங்கும் விலங்கு: எது தெரியுமா?
ஒட்டகங்கள் தான் தனக்கு ஏற்பட்ட ஒரு நோய் குணமாக விஷபாம்புகளை உண்ணும்.
ஒட்டகங்கள் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வாழ்கின்றன. பாம்புகளை சாப்பிடுவது அவற்றின் உணவுமுறை இல்லை.
ஆனால் சில சிறப்பு சந்தர்ப்பங்களில், ஒட்டகங்களுக்கு பாம்புகள் உணவாக அளிக்கப்படுகின்றன.
ஒட்டகத்திற்கு நோய் தாக்கும் போது பாம்புகள் உணவாக அளிக்கப்படுகின்றன. ஒட்டகங்களை தாக்கும் இந்த நோய் hayam என்று அழைக்கப்படுகிறது.
இந்த நோய் பாதிப்பு ஏற்படும் போது, தண்ணீர் அல்லது பிற உணவு எடுத்து கொள்வதை ஒட்டகங்கள் நிறுத்தி விடுகின்றன.
எனவே தான் இது போன்ற பாதிப்பிலிருந்து ஒட்டகத்தை குணப்படுத்த, விஷப்பாம்புபை உணவாக அளிக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில், ஹயாம் நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு பாம்புகளை உணவாக கொடுப்பதால் நோய் பாதிப்பு குணமாகும் என நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஒட்டகத்தின் வாயைத் திறந்து பாம்பை கட்டாயப்படுத்தி உணவாக அளிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது.
பாம்பை உண்பதால் ஒட்டகத்தின் உடல் முழுவதும் பரவும் விஷத்தின் தாக்கம் நீங்கிவிட்டால், ஒட்டகம் பாதிப்புகளில் இருந்து சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.
ஒட்டகங்கள் பாம்பு விஷத்திற்கு எதிரான நோயெதிர்ப்புத் திறனை கொண்டுள்ளதால், இது மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது அவற்றை சிறந்த நிலையில் வைக்கிறது.
பாம்பிலிருந்து ஒட்டகத்தின் உடலில் பரவும் விஷம், குறிப்பிட்ட ஒட்டகத்தின் உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.
இது நோயை எதிர்த்துப் போராட உதவுவதாக ஒட்டகங்கள் பிரதானமாக வாழும் பல பிராந்தியங்களில் நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |