ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் கற்கள் ஏன் கொட்டப்படுகின்றன தெரியுமா?
why are railway tracks filled with stones- இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தண்டவாளங்களின் அடியில் பெரிய பெரிய ஜல்லிக் கற்கள் கொட்டப்படுகின்றன.
ரயில் தண்டவாளத்தில் போடப்படும் இந்த கற்கள் டிராக் பேலஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த கற்கள் ரயில் தண்டவாளங்களை நிலையாக வைத்திருப்பதிலும், அவற்றின் அசைவை குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மேலும், தண்டவாளங்களை உறுதியாக நிலைநிறுத்துவதுடன், ரயிலின் எடையை சரியாக பகிர்ந்தளிக்கவும் உதவுகின்றன.
பொதுவாக ரயில்களின் எடை மற்றும் இயக்கம் காரணமாக தண்டவாளங்கள் நகரக்கூடும்.
எனவே, தண்டவாளங்களுக்கு அடியில் உள்ள கற்கள், ஸ்லீப்பர்களை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகின்றதால் தண்டவாளங்களின் அசைவு குறைகிறது.
மேலும், ரயில் சக்கரங்கள் தண்டவாளங்களில் அதிக சுமையை ஏற்படுத்துகின்றன.
இந்த சுமை தண்டவாளங்கள் வழியாக ஸ்லீப்பர்களுக்கும், பின்னர் பேலஸ்ட் கற்களுக்கும் செல்கின்றதால் ரயிலின் எடை பரந்த பரப்பில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மேலும், கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் வழியாக மழைநீர் வெளியேறுகின்றதால் தண்டவாளங்களின் அடிப்பகுதியில் நீர் தேங்குவது குறைகிறது.
அதேபோல், ரயில் வேகமாகச் செல்லும்போது அதிர்வுகளும் சத்தமும் ஏற்படுகின்றன. பேலஸ்ட் கற்கள் இதனை குறைக்க உதவுகின்றன.
குறிப்பாக, தண்டவாளங்களுக்கு அடியில் கற்கள் இருப்பதால் செடிகள் வளர்வது கடினமாகிறது.
கற்களுக்கு இடையே அதிக ஈரப்பதம் தேங்காமல் இருப்பதால், தாவரங்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |