செல்போன்களின் சார்ஜர்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது தெரியுமா?
இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
செல்போன்களை பற்றி பல விடயங்கள் நாம் அனைவருக்கும் தெரிந்தாலும் அதன் சார்ஜர் பற்றி பலருக்கும் தெரியாது.
பொதுவாக, பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் வெள்ளை நிறத்திலேயே சார்ஜர்களை அறிமுகப்படுத்துகின்றன.
இந்நிலையில், சார்ஜர்களின் நிறம் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தற்போது பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெள்ளை நிறத்தில் சார்ஜர்களை உருவாக்க பல காரணங்களை கூறுகின்றன.
வெள்ளை நிறம் பிரீமியம் தோற்றத்தை அளிப்பதால் தான் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை வெள்ளை நிறத்தில் வைத்துள்ளது.
இதுதவிர, வெள்ளை நிறத்தில் அழுக்கு, கீறல்கள் ஆகியவை உடனடியாகத் தெரியும் என்பதால் இது ஒரு வகையில் பாதுகாப்பானது.
வெள்ளை நிற பிளாஸ்டிக்கை உருவாக்குவது நிறுவனங்களுக்கு எளிதானது மற்றும் மலிவானது என்பதால் இதனை எளிதில் வடிவமைக்கப்படுகிறது.
சார்ஜர்களில் சார்ஜ் செய்யும் போது வெப்பத்தை உருவாக்குவம். ஆனால் வெள்ளை நிறம் அதிக வெப்பத்தை உறிஞ்சாது.
இதனால் சார்ஜரை குளிர்ச்சியாக வைத்திருப்பதால் சார்ஜரின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |