ரயில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது?
ரயிலில் காணப்படும் பல விஷயங்களுக்கு நம்மில் பலருக்கும் அர்த்தம் தெரியாது.
அதில் சாதாரண மற்றும் படுக்கை வசதி கொண்டே ரயில் பெட்டிகளில் கதவின் அருகில் உள்ள ஜன்னல்கள் வித்தியாசமாக இருப்பது.
அதாவது ரயில் கதவின் அருகிலுள்ள கடைசி ஜன்னலில் கம்பிகள் மற்ற ஜன்னல்களை விட நெருக்கமாக ஒருவருடைய கைகள் உள்ளே நுழையாதவாறு அமைக்கப்பட்டு இருக்கும்.
ரயிலில் பயணம் செய்யும் பலரும் இது ஏன் என சிந்தித்திருப்பார்கள்.
உண்மையில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக இருக்கும் என்ற காரணத்தை நாம் தெரிந்து கொள்வோம்.
தொடர்வண்டி சாளரங்களில் கம்பிகள் செங்குத்தாக இருந்தால், வண்டி விரைந்து செல்லும்போது, பெட்டிகளுடன் கம்பிகளின் பக்கவாட்டு நகர்வால், ஜன்னல் மூலம் வெளிப்புறக்காட்சிகளைக் காண்பது தடைப்பட்டு, தெளிவாகத் தெரியாது.
கிடைமட்டமாக இருந்தால் இந்தத் தொல்லை கிடையாது. இது தவிர, மற்றொரு முக்கிய காரணம், கம்பிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டிருந்தால் ஜன்னல் மூடிகளை இயக்குவதும் கடினமாகி விடும்.
இதுவே இதன் காரணமாக சொல்லப்படுகின்றது.