சாலையில் உள்ள மைல்கல் ஏன் வெவ்வேறு நிறங்களில் உள்ளன? அதற்கான அர்த்தம் என்ன
சாலைகளில் உள்ள மைல்கல் வெவ்வேறு நிறங்களில் இருப்பதற்கான காரணத்தை நாம் இங்கு அறிந்து கொள்ளலாம்.
மைல்கல்
சாலையில் நாம் செல்லும்போது மைல்கல்லை பார்க்கிறோம். உங்கள் பணியிடத்திற்குச் சென்றாலும் அல்லது குடும்பத்துடன் நீண்ட பயணம் செல்வதாக இருந்தாலும், மைல்கல்லை பார்ப்பதுண்டு.
ஆனால், அவை வெவ்வேறு வண்ணங்களில் இருக்கின்றன. அது ஏன் என்ற தகவலை தான் இந்த பதிவில் பார்க்கலாம்.
சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மைல்கல் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கின்றன. அவை நாம் சேருமிடத்தின் தூரம் அல்லது அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பிற முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு உதவும்.
நமது நாடு கிராமப்புற சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளை உள்ளடக்கியது.
மஞ்சள் நிறம்
ஒரு மஞ்சள் நிற மைல்கல் நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை குறிக்கிறது. அவை வெவ்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களை ஒருங்கிணைக்கிறது.
மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த சாலை கனரக வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
பச்சை நிறம்
மாநில நெடுஞ்சாலைகளில் பச்சை நிறத்துடன் கூடிய மைல்கல் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒரு மாநிலத்தின் பல்வேறு நகரங்களை இணைக்கின்றன.
மாநிலங்களுக்குள் மாவட்டங்களை இணைக்கும் வகையிலான இந்த சாலை கனரக வாகனங்கள் செல்லும் தரத்தில் அமைக்கப்படும்.
நீல நிறம்
கருப்பு அல்லது நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட மைல்கல், ஒரு நகரம் அல்லது மாவட்ட சாலையில் பயணிப்பதை குறிக்கிறது. ஒரு மாவட்டத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படும்.
ஆரஞ்சு நிறம்
ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஒரு மைல்கல் ஒரு கிராமப்புற சாலையில் பயணிப்பதை குறிக்கிறது. கிராமங்களை நகரச் சாலைகளோடு இணைக்கும் மாவட்ட இதர சாலைகளில் இந்த மைல்கல் பயன்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |