சில முதலைகள் கடலில் ஏன் இருப்பதில்லை?
பொதுவாக, முதலைகள் வெப்ப மண்டல ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழ்கின்ற ஊர்வன இனத்தைச் சேர்ந்தது.
முதலைகள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் பெரிய ஊர்வனவாகும்.
கெய்மன்கள், கரியல்கள் மற்றும் முதலைகள் உள்ளன. 13 வகையான முதலைகள் உள்ளன.
குறிப்பிடும் படியாக முதலைகளுள் ஒரு சில வகைகளே கடலில் வசிக்கும். பெரும்பாலும் முதலைகள் கடற்கரை அல்லது கடற்கரையிலிருந்து கடலுக்குள் சில மைல் தொலைவில் வசிக்கும்.
ஆனால் நடுக்கடலில் வசிப்பது என்பது அரிது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியாவை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் முதலைகள் வசிக்கின்றன.
இவை எப்போதாவது கடலுக்குள் ஒரு 550–600 கி.மீ. தூரம் வரை சென்று வரும். இவற்றுக்கும் நாம் சாதாரணமாக பார்க்கும் முதலைகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
கடல் முதலைகள் சாதாரண முதலைகளை விட அளவிலும் எடையிலும் அதிகமாக இருக்கும். இவை எப்போதும் நீரில் இருக்காது. அதன் உடலுக்கும் குறிப்பிட்ட அளவு வெப்பம் தேவை.
அதனால் இவை தேவைப்படும்போது கடற்கரைப் பகுதிக்கு வந்து மணற்பரப்பில் சிறிது நேரம் தங்கி உடலை வெப்பப்படுத்திவிட்டு மீண்டும் கடலுக்குள் செல்லும்.