ரயிலில் உள்ள லைட் மற்றும் ஃபேன்கள் ஏன் திருடப்படுவதில்லை? பின்னால் இருக்கும் காரணம்
ரயில்களில் உள்ள லைட், ஃபேன்களை திருடர்கள் திருடி செல்லக்கூடாது என்பதற்காக இந்திய ரயில்வே சில நுணுக்கமான வேலைகளை செய்துள்ளது.
என்ன காரணம்?
பயணிகளின் வசதிக்காக ரயில்களில் லைட் மற்றும் ஃபேன்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த பொருட்களை திருடர்கள் யாரும் திருடுவதில்லை.
இதற்காக இந்திய ரயில்வே சில நுணுக்கமான வேலைகளை செய்துள்ளது. ரயில்களில் உள்ள லைட், ஃபேன்களை திருடர்கள் திருடி சென்றாலும் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது.
ஏனென்றால், ரயில்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களான லைட் மற்றும் ஃபேன்கள் ஆகியவை 110 வோல்ட் ஆற்றல் கொண்டவை.
இதனை ரயில் மற்றும் ரயில்வே தொடர்பான விடயங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
குறிப்பாக வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருட்கள் சுமார் 210 வோல்ட் மின்சாரத்தில் இயங்குகின்றன.
ஆனால், திருட்டை தடுப்பதற்காக ரயில்வேயில் 230 வோல்ட்டுக்குப் பதிலாக 110 வோல்ட் மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த காரணத்தினால் தான் ரயில்களில் திருடர்கள் திருடுவதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |