தோனியை எதிர்த்து பேசும் ஒரே வீரர் இவர் மட்டும் தான்! உண்மையை உடைத்த அம்பதி ராயுடு
சென்னை அணியில் தோனியை எதிர்த்து பேசும் ஒரே நபர் தீபக் சாஹர் தான், எனவே தான் அவரை மட்டும் தோனி அடிக்கடி சீண்டி கொண்டே இருக்கிறார் என CSK முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தீபக் சாஹரை சீண்டும் தோனி
இந்தாண்டின் ஐபிஎல் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த ஆண்டு தொடரில் நடைபெற்ற ஒட்டுமொத்த போட்டிகளிலும் விறுவிறுப்புக்கு குறைவு இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்து இருந்தது, அந்த வரிசையில் மைதானத்திற்குள் தோனி மற்றும் தீபக் சாஹர் இடையிலான சீண்டல்களும் ரசிகர்களை கவர்ந்தது.
தோனி பேட்டிங் களமிறங்குவதற்கு முன்பாக தீபக் சாகரை பேட்டால் அடிக்க செல்வது, நாணய சுழற்சிக்கு பின்பாக ஓய்வு அறைக்கு திரும்பும் போது தீபக் சாகரை அடிக்க கை நீட்டுவது, அதே போல் கோப்பை சென்னை அணி வென்ற பிறகு, தோனிடம் தீபக் சாஹர் ஆட்டோகிராப் கேட்கும் போது தோனி வழங்க மறுத்தார்.
மேலும் கைக்கு வந்த கேட்சை எடுக்க முடியாத உனக்கு ஆட்டோகிராப் தர மாட்டேன் என்று வம்பு பண்ணும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
தோனியின் சீண்டலுக்கான பின்னணி
இந்நிலையில் தோனி தீபக் சாஹரை மட்டும் சீண்டுவதற்கான காரணம் என்னவென்று CSK முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், CSK அணியில் தோனி பேச்சை எதிர்த்து பேசும் ஒரே ஆள் தீபக் சாஹர் மட்டும் தான், அதனால் தான் தீபக் சாகரை தோனி அடிக்கடி சீண்டி வருகிறார்.
தீபக் சாஹருக்கு கிரிக்கெட் பற்றி எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உண்டு, எனவே ஓய்வு அறையில் தோனி எதாவது கூறும் போது அதனை எதிர்த்து தீபக் சாஹர் மட்டுமே எதிர் கருத்தினை வெளிப்படுத்துவார்.
ஆனால் தீபக் சாஹர் இப்படி பேசுவது தான் தோனிக்கும் மிகவும் பிடிக்கும், தோனி அவர் மீது நிறைய அன்பு வைத்து இருக்கிறார், தீபக் சாஹர் தோனிக்கு சகோதரர் போன்றவர், எனவே தான் அவரிடம் தொடர்ந்து சீண்டல் செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |