இளவரசர் ஹரியின் காதலி தற்கொலை செய்துகொண்டது எதனால்? உருவாகியுள்ள சர்ச்சை
இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அது குறித்த சில விடயங்களை ஹரி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர் கூறிய விடயத்திற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி
ஹரி, தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davyயைப் பிரிந்தபின், Caroline Flack என்ற பெண்ணை பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளார். இருவரும் பழகத் துவங்கியுள்ளார்கள்.
ஆனால், இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், Carolineஉடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம்.
இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக Carolineஉடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.
பின்னர், லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார் Caroline. அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது! இந்த விடயங்களை தனது புத்தகமாகிய Spareஇல் குறிப்பிட்டுள்ளார் ஹரி.
ஹரி கூறிய விடயத்திற்கு எதிர்ப்பு
இந்நிலையில், 12 ஆண்டுகள் Carolineஉடன் பணியாற்றிய Alex Mullen என்பவர், ஹரியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஹரி Carolineஉடைய மரணத்துக்காக ஊடகங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் ஊடகங்களில் படித்ததை வைத்து அவர் அப்படிக் கூறியுள்ளார்.
ஆனால், Carolineக்கு எதனால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது ஹரிக்குத் தெரியாது என்று கூறியுள்ள Alex, ராஜ குடும்பம் ஹரியின் பட்டங்கள் அனைத்தையும் பறிக்கவேண்டும் என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Carolineம் ஹரியும் காதலித்த நாட்களில், அவரைக் குறித்தும், அவர்கள் பிரிவைக் குறித்தும் ஊடகங்கள் பல்வேறு விடயங்களை வெளியிட்டன.
அப்போது அது குறித்துக் கேட்கும்போது சிரித்துக்கொண்டே வேடிக்கையாக பதிலளித்தார் Caroline என்பது உண்மைதான் என்று கூறியுள்ள Alex, ஆனால், உண்மையில் அந்த விடயங்கள் அவரை மிகவும் அதிகமாக காயப்படுத்தின என்கிறார்.
தனது புத்தகம் விற்கவேண்டும் என்பதற்காக மக்கள் மறந்துபோன அந்த பயங்கரமான விடயங்களை எல்லாம் மீண்டும் நினைவுபடுத்த ஹரி எடுத்த முடிவு பயங்கரமானது என்கிறார் அவர்.