அந்த முக்கியமான நேரத்தில் நான் மைதானத்தை விட்டு வெளியேறியது ஏன்? கோஹ்லி தெளிவான விளக்கம்
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் நான் மைதானத்தை விட்டு வெளியேற என்ன காரணம் என்பது குறித்து கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நான்காவது டி20 போட்டி, அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் சிறப்பாக ஆடி வர, இங்கிலாந்து அணி வெற்றி உறுதி என்றே கூறப்பட்டது.
ஆனால், 17-வது ஓவரில் கோஹ்லி திடீரென்று மைதானத்தை விட்டு வெளியேற, ரோகித் கேப்டனாக செயல்பட்டு, இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இதனால் கோஹ்லி மீது விமர்சனம் விழுந்தது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அணியை இப்படியா விட்டு செல்வது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து கோஹ்லி கூறுகையில், இந்த போட்டியின் போது ஒரு பந்தினை பிடிக்க நான் ஓடிச்சென்று பின்பு த்ரோ செய்யும்பொழுது எனக்கு அசௌகரியம் ஏற்பட்டது.
இதன் காரணமாக மேற்படி அந்த வலி தொடரக் கூடாது எனவும் மேலும் அது தசை பிடிப்பாகவோ அல்லது காயமாகவோ மாறக்கூடாது என்பதற்காக நான் கடைசி சில ஓவர்களில் மைதானத்தை விட்டு வெளியேறினேன்.
அடுத்த இரண்டு நாட்களில் இறுதிப்போட்டி உள்ளதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அதற்கு பதிலாக துணை கேப்டன் ரோகித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தினார் என கூறினார்.
