டிவியை ரிமோட்டால் உடைத்தது ஏன்? கமல் ஹாசன் சொன்ன புதிய விளக்கம்
ரிமோட்டை கொண்டு கமல் ஹாசன் டிவியை உடைத்த சம்பவம் பேசுபொருளான நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
கமல் பேசியது
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் பேசுகையில், "ரிமோட்டை எடுத்து டிவியை அடித்தவர் தானே என்று என்னை சொல்கிறார்கள்.
நம் வீட்டு ரிமோட், டிவி. ஆனால் டிவிக்கான மின்சாரத்தையும், ரிமோட்டுக்கான பேட்டரியையும் எடுக்க பார்க்கும் சக்தி மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
காந்தி இறக்கவில்லை. அவர், மதசார்பற்ற இந்தியாவுக்காக குண்டு ஏந்தி இறந்தார். அதேபோல மதச்சார்பற்ற இந்தியாவுக்காக நான் போட்டியிடவில்லை. இது தியாகமல்ல, வியூகம்.
அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்வதை விட சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு திமுகவுடன் ஆலோசித்து தேர்வு செய்துள்ளோம்.
அதன்படி மார்ச் 29 -ல் ஈரோடு, 30 -ல் சேலம், ஏப்.2 -ல் திருச்சி, ஏப்.3 -ல் சிதம்பரம், ஏப்.6 -ல் பெரும்புதூர், ஏப்.7- ல் சென்னை, ஏப்.10 -ல் மதுரை, ஏப்.11 -ல் தூத்துக்குடி, ஏப்.14 -ல் திருப்பூர், ஏப்.15 -ல் கோவை, ஏப்.16 -ல் பொள்ளாச்சியில் பிரச்சாரம் செய்யவுள்ளேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |