பிரித்தானிய நிதி அமைச்சரை லிஸ் ட்ரஸ் பதவிநீக்கம் செய்தது ஏன்?: புதிய நிதி அமைச்சர் யார்?
பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை, தடுமாறும் பிரித்தானியாவின் பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடிக்கத் தடுமாறி வருகிறது.
இதனால், பொதுமக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை மீது அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
பிரித்தானியாவில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் முதலான பல்வேறு குழப்பங்கள் காரணமாக, பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை பதவிநீக்கம் செய்துவிட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்தன.
உஷாரான லிஸ் ட்ரஸ், நிதி அமைச்சராக இருந்த Kwasi Kwartengஐ திடீரென பதவிநீக்கம் செய்தார். இத்தனைக்கும் Kwarteng நிதி தொடர்பான முக்கிய சந்திப்பு ஒன்றிற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே லிஸ் ட்ரஸ் Kwartengஐ பதவிநீக்கம் செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, Kwartengக்கு பதிலாக முன்னாள் வெளியுறவு மற்றும் சுகாதாரச் செயலராக இருந்த Jeremy Huntக்கு புதிய நிதி அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அவராவது வீழ்ச்சியடையும் பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்க பிரதமருக்கு உதவுவாரா பார்க்கலாம்.
Justin Tallis/Agence France-Presse — Getty Images