இளவரசர் ஹரி தனது புத்தகத்துக்கு ஏன் அந்த பெயரை வைத்திருக்கிறார்? மோசமான காரணத்தை வெளியிட்டுள்ள விமர்சகர்
தனது அண்ணனான இளவரசர் வில்லியம் மீதான பொறாமையின் வெளிப்பாடே, தனது புத்தகத்துக்கு இளவரசர் ஹரி வைத்திருக்கும் பெயருக்குக் காரணம் என்கிறார் விமர்சகர் ஒருவர்.
அதன் பின்னணியில் வேறொரு பொருளும் உள்ளது.
இளவரசர் ஹரி தான் எழுதி வெளியிடத் தயாராக இருக்கும் தனது புத்தகத்துக்கு ’Spare’ என்று பெயர் வைத்திருக்கிறார்.
அவர் அந்த பெயரை தனது புத்தகத்துக்கு வைப்பதற்கு, அவருக்கு அவரது அண்ணனாகிய இளவரசர் வில்லியம் மீதான பொறாமையே காரணம் என்கிறார் அவுஸ்திரேலிய விமர்சகரான Andrew Bolt என்பவர்.
ஹரி தனது புத்தகத்துக்கு ’Spare’ என பெயர் வைத்துள்ளது ஏன் என்றால், தான் ஒரு Spare ஆக, அதாவது, அவசியமான ஒரு பொருள் இல்லாதபட்சத்தில், அதற்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஒரு மாற்றுபொருளாக கருதப்படுவதே என்கிறார் Andrew.
இன்னமும் வெளிப்படையாக சொன்னால், இளவரசர் வில்லியமுக்கு விபத்து ஏதாவது நிகழ்ந்து அவரால் மன்னராக முடியாமல் போய்விட்டது என்றால், அவருக்கு பதிலாக தனக்கு சில பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என ஹரி கருதுகிறார் என்பது அதன் பொருள் என்கிறார் Andrew.
ஆனால், அப்படியே துரதிர்ஷ்டவசமாக இளவரசர் வில்லியமுக்கு ஏதாவது ஆகிவிட்டால் கூட, மன்னர் இருகையில் அமர, ஹரிக்கு முன்னால், இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகளான குட்டி இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.