கட்சியில் இணைந்த 9 நாட்களிலே விலகியது ஏன்? அம்பத்தி ராயுடு கூறும் தெளிவான விளக்கம்
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கம் அளித்துள்ளார்.
கட்சியில் இணைந்து விலகிய அம்பத்தி ராயுடு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர், முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.
இதனைத்தொடர்ந்து, சிஎஸ்கே அணியில் இணைந்ததார். 2018 முதல் 2023 -ம் ஆண்டு வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடினார். நடந்து முடிந்த 2023 -ம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வு முடிவை அம்பதி ராயுடு அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த 28ம் திகதி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் அம்பத்தி ராயுடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை, ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கட்சியில் இணைந்த 9 நாள்களிலே அரசியலில் இருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்தார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்து இருப்பதாகவும்" கூறியிருந்தார்.
என்ன காரணம்?
அவர் கட்சியில் இருந்து விலகியதற்கு என்ன காரணம் என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில், "துபாயில் ஜனவரி 20 -ம் திகதி முதல் நடைபெறவிருக்கும் ILt20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை நான் பிரதிநிதித்துவப்படுத்தவிருக்கிறேன்.
I Ambati Rayudu will be representing the Mumbai Indians in the upcoming ILt20 from jan 20th in Dubai. Which requires me to be politically non affiliated whilst playing professional sport.
— ATR (@RayuduAmbati) January 7, 2024
எனவே, தொழில்முறை விளையாட்டை விளையாடும்போது அரசியல் ரீதியில் தொடர்பில்லாதவராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |