ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? நடிகை டாப்ஸி கொடுத்த விளக்கம்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் கலந்து கொள்ளாதது குறித்து நடிகை டாப்ஸி விளக்கம் அளித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
டாப்ஸி பேசியது
அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளாதது குறித்து நடிகை டாப்ஸி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "எனக்கு அம்பானி குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. அவர்கள் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இல்லை.
திருமணம் என்பது உறவுகளுடன் கூடியது. விருந்து கொடுக்கும் குடும்பத்தினருக்கும், விருந்தினர்களின் குடும்பத்திற்கும் இடையே ஒரு பந்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான திருமணங்களுக்கு தான் செல்வேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |