கற்களை விரும்பி உண்ணும் முதலைகள்.., என்ன காரணம் தெரியுமா?
முதலை ஊர்வன வகுப்பினைச் சேர்ந்த வினோதமான மற்றும் ஆபத்தான ஒரு விலங்கு ஆகும்.
நீரிலும், நிலத்திலும் வாழும் முதலைகள் நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது.
ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கின்றது.
பறவைகள் மற்றும் பிற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் முதலைகள் கற்களையும் வேண்டுமென்றே விழுங்குகின்றன.
விஞ்ஞானிகளின் ஆய்வுகளின்படி, முதலைகள் இரண்டு முக்கிய காரணங்களுக்காக கற்களை விழுங்குகின்றன.
முதலைகள் உணவை மென்று சாப்பிடாமல், பெரிய இறைச்சித் துண்டுகள், எலும்புகள் போன்றவற்றை அப்படியே விழுங்கிவிடுகின்றன.
அவற்றின் வயிற்றில் இருக்கும் காஸ்ட்ரோலித் எனப்படும் கற்கள், உணவை சிறிய துண்டுகளாக உடைத்து எளிதாக செரிமானமாகிறது.

முதலைகள் பெரும்பாலும் நீரில்தான் வாழ்கின்றன. எனவே நுரையீரலில் காற்று இருப்பதால் அவற்றின் உடல் எளிதாக மிதக்கும்.
கற்களை விழுங்குவதால் உடல் எடை சற்று அதிகரிக்கும் என்பதால் அவை அதிக ஆற்றல் செலவில்லாமல் நீருக்குள் நீண்ட நேரம் மூழ்கியிருக்க முடிகிறது.
அதேபோல், நீண்ட காலமாக பயன்படுத்திய கற்களை முதலைகள் வாயின் வழியாக வெளியேற்றி, பின் புதிய கற்களை விழுங்கிக் கொள்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |