Lift-களின் உள்ளே கண்ணாடி பொருத்தப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?
தற்போதைய காலத்தில் அலுவலகங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் உயர்ந்த கட்டிடங்களாக கட்டப்பட்டு வருகின்றனர்.
இதனால் மக்கள் தங்களின் குடியிருப்புகள் அல்லது பணிபுரியும் அலுவலக தளத்திற்கு செல்ல மின் தூக்கியை(Lift) பயன்படுத்துகின்றனர்.
இந்த லிப்ட்களின் உள்ளே முகம் பார்க்கும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதை அனைவரும் பார்த்திருக்கக் கூடும். இதற்கான காரணம் என்னவென்று பலருக்கும் தெரியாத ஒன்று.
லிப்ட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை நீங்கள் பார்க்கும்போது அது உங்களின் உருவத்தை பிரதிபலிக்கும். இதனால் நீங்கள் தனியாக இல்லை என்ற மனநிலையை ஏற்படுத்தும்.
மனோதத்துவ சாஸ்திரப்படி இது உங்கள் உள் மனதை ஆக்ரமித்துக் கொண்டு கிளாஸ்ட்ரோஃபோபியா என்னும் பய உணர்வை குறைக்க உதவும்.
மேலும், லிப்ட் எப்போது நம் தளத்திற்கு சென்றடையும் என்ற உணர்வில் உண்டாகும் இதய படபடப்பு மற்றும் நடுக்கத்தைக் குறையச் செய்யும்.
லிப்ட்டின் கண்ணாடி மாற்றுத்திறனாளிகள் சுவரில் மோதிக்கொள்ளாமல், இயல்பாக லிஃப்ட்டிற்குள் நுழைந்து, அவர்கள் இருக்கையை நிலைநிறுத்தி அமர்ந்துகொள்ள உதவியாக இருக்கும்.
அலுவலக மீட்டிங்கிற்கு செல்லும்போது தங்களில் உடைகளை சரிசெய்துகொள்ள லிப்ட்டின் கண்ணாடி உதவும்.
மேலும், வெளிச்சத்தில் மேலும் அதிக பிரகாசம் கொடுத்து ஆடம்பரமான தோற்றத்தைத் தரவும் உதவி புரியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |