கறிவேப்பிலையை தவறியும் கையில் கொடுக்காதீர்கள் - ஏன் தெரியுமா?
பொதுவாகவே நாம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை இரவில் வழங்கக் கூடாது, இதை வீட்டில் வைத்திருக்கக் கூடாது மற்றும் ஒருவரிடம் கையில் கொடுக்கக் கூடாது என பல கருத்துகளை முன்னோர்கள் கூறுவார்கள்.
அன்றாட சமையலில் நீங்கள் பயன்படுத்தும் கறிவேப்பிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? இது ஒருவருக்கு ஆரோக்கியத்திற்கும் சமையலில் சுவைக்கும் உதவுகிறது.
ஆனால் அதையும் மீறி ஒரு விடயம் இருக்கிறது. கறிவேப்பிலை பற்றி நம்மில் பலரும் அறியாத விசித்திரமான விடயம் ஒன்று இருக்கிறது.
கறிவேப்பிலையை கைகளில் கொடுக்கக் கூடாது என முன்னோர்கள் கூறிய விடயம் உங்களுக்கு தெரியுமா? இல்லையெனில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கறிவேப்பிலையை கையில் கொடுக்க கூடாது
கறிவேப்பிலையை ஒருவர் கையில் வழங்கக் கூடாது என்று முன்னோர்கள் கூறி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதற்கான காரணம் குறித்து ஒரு போதும் நீங்கள் ஆராய்ந்து பார்த்திருக்க மாட்டீர்கள்.
கறிவேப்பிலைக்கு எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. இது பலருக்கும் எதிர்மறை ஆற்றலை தான் வழங்கும்.
இதை ஒருவருடைய கையில் நீங்கள் நேரடியாக வழங்கினால் அவர்களுக்கு எதிர்மறை ஆற்றல் கடத்தப்படும்.
உதாரணமாக கூற வேண்டுமென்றால், நீங்கள் ஒருவர் கையில் கறிவேப்பிலையை வழங்கும் போது அவருக்கும் உங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் வாப்பு அதிகமாக இருக்கிறது.
எனவே தான் வீட்டின் முற்றத்தில் கறிவேப்பிலை மரம் வளர்ப்பதையும் முன்னோர்கள் தடை செய்துள்ளனர்.
நீங்கள் நினைப்பது போன்று இதை சுவைக்காக சமையலுக்கு பயன்படுத்தவில்லை. சமையில் சிறிய அளவில் இருக்கும் நச்சு தன்மையை போக்குவதற்காகவும் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.
கறிவேப்பிலையில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கின்றது என்பது அறிவியல் உண்மை. எனவே உறவை நல்ல முறையில் பேண வேண்டும் என நினைப்பவர்கள் கையில் கறிவேப்பிலையை வழங்குவதை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |