மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது பச்சை நிற உடைகளை ஏன் அணிகிறார்கள் தெரியுமா?
அறுவை சிகிச்சை செய்யும்பொழுது மருத்துவர்கள் ஏன் பச்சை அல்லது நீல நிற உடைகளை அணிவதை காணலாம்.
அறுவை சிகிச்சை அரங்கம் இருட்டாக இருப்பதால், பச்சை அல்லது நீல நிறங்கள் வெளிச்சத்திலிருந்து இருண்ட அறைக்குள் நுழையும் போது நல்ல உணர்வைத் தரும்.
பச்சை மற்றும் நீல நிறங்கள் கண்களுக்கு நல்லது என்பதால் அறுவை சிகிச்சை அரங்கில் மருத்துவர்கள் இந்த இரண்டு வண்ணங்களையும் அணிகிறார்கள்.
அதனால்தான் மருத்துவமனைகள் திரைச்சீலைகள் முதல் ஊழியர் சீருடைகள் மற்றும் முகமூடிகள் வரை பச்சை மற்றும் நீல நிறங்களை பயன்படுத்துகின்றன.
ஒளி நிறமாலையில் பச்சை மற்றும் நீலம், சிவப்பு நிறத்திற்கு எதிரான நிறங்கள் என்று கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் இந்த ஆடையை அணிவதால் அவரது முழு கவனமும் மனித உடலில் உள்ள இரத்தத்தின் சிவப்பு நிறத்தில் குவிந்திருக்கும்.
பச்சை மற்றும் நீல நிறங்கள் அறுவை சிகிச்சை நிபுணரின் செயல்திறனை அதிகரிக்கும்.
இது தவிர, அறுவை சிகிச்சை அரங்கின் வெளிச்சத்தில் இரத்தக் கறைகள் பழுப்பு நிறத்தில் தோன்றும். பச்சை நிற சீருடை அணிந்தால் பழுப்பு நிற ரத்தம் தெளிவாகத் தெரியும்.
மேலும், மனித உடலின் இரத்தத்தையும் உள் உறுப்புகளையும் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் மருத்துவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
அத்தகைய சூழ்நிலையில், பச்சை மற்றும் நீல நிற ஆடைகளை அணிவது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும். இந்த நிறங்கள் மனநிலையை அமைதிப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |