நெருப்பு ஏன் எப்போதும் மேல் நோக்கியே எரிகின்றது?
சூடான காற்று குறைவான அடர்த்தியுள்ளது சுற்றியுள்ள குளிரான காற்று அதிக அடர்த்தியுள்ளது . எனவே அடர்த்தி அதிகம் உள்ள குளிரான காற்று அடர்த்தி குறைவான சூடான காத்த மேலே தள்ளுகிறது.
அது போல குளிரான காற்று வெப்பம் அடையும் போது அதன் குளிர் மூலக்கூறுகள் விலகி அதன் எடை குறைகிறது.இதன் விளைவாக சூடான காற்று மேல்நோக்கி நகரும்போது ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்கிறது.
இதற்கு இயற்பியலில் வெப்பச் சலனக் கொள்கை என்று பெயர்.
இக்கொள்கையின்படி, நெருப்பு எரியும்போது நெருப்பின் மேல் உள்ள எரியக்கூடிய பகுதியில் உள்ள காற்றின் அடர்த்தி அதைச் சுற்றியுள்ள காற்றின் அடர்த்தியை விட குறைவாக இருக்கும்.
காற்று அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி, அருகில் உள்ள அடர்த்தியான(குளிர்ந்த) காற்று ஓடி வரும்.
தீ பற்றியவுடன், அதைச்சுற்றியுள்ள காற்று வெப்பமடைவதால், அந்த நெருப்பை சுற்றியுள்ள காற்று முழுவதும் சூடாகி மேலே செல்லும்.
அவ்வாறு செல்வதால் தான் நெருப்பு மேல்நோக்கி எரிகிறது.