தவெக பஸ் முதல் BMW கார் வரை.., விஜய் வாகனத்தில் 0277 என்ற எண் ஏன்?
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கி இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
பெரும்பான்மை பெறாததால் தவெக எப்படி நெருக்கடியைத் தாண்டி ஆட்சியமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், விஜய் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் ரசிகர்களிடையே ஒரு தனித்துவ கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில் விஜய் மூன்று புதிய கார்களை வாங்கியுள்ளார். இதில் ஒரு பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார், ஒரு லெக்ஸஸ் எல்எம் மற்றும் ஒரு டொயோட்டா வெல்ஃபயர் ஆகியவை அடக்கம்.
அரசியலில் தீவிரமாக இறங்கிய விஜய், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு சிறப்புப் பேருந்தையும் வாங்கினார்.
அந்தவகையில், விஜய்யின் இந்த அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்களிலும் 0277 என்ற ஒரே எண் தான் உள்ளது.
BMW மின்சார கார் எண் TN 14 AH 0277, லெக்ஸஸ் LM கார் எண் TN 14 AL 0277, டொயோட்டா வெல்ஃபயர் கார் எண் TN 14 AM 0277.

மேலும், தவெக பிரச்சார பேருந்தின் எண் TN 14 AS 0277 ஆக உள்ளது.
இந்த எண் 14-02-77, அதாவது பிப்ரவரி 14, 1977 திகதியைக் குறிக்கிறது. இந்த திகதி, மிக இளம் வயதிலேயே காலமான விஜய்யின் தங்கை வித்யாவின் பிறந்த நாள்.
மறைந்த தன் சகோதரியின் நினைவை எப்போதும் தன்னுடன் வைத்திருக்க, விஜய் தன் வாகனங்களில் இந்தத் திகதியை பயன்படுத்துகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |